Isha: உண்மை கண்டறியும் குழுவினருக்கும் ஈஷா ஊழியர்களுக்கும் இடையே மோதல்.. வேன் கண்ணாடி உடைப்பு!
Isha : ஈஷா ஆதரவாளர்கள் உண்மை கண்டறியும் குழுவினர் சென்ற வேனின் கண்ணாடியை உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரையும் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடக்கி உள்ளனர்.
கோவை முட்டத்துவயல் பகுதியில் ஈஷா யோகா மையம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மின் தகன மேடை உள்ள பகுதியை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற முற்போக்கு அமைப்புகளின் உண்மை கண்டறியும் குழுவினருக்கும், ஈஷா ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஏற்பட்டது. இதி வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது அப்பகுதில் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.
ஈஷா அறக்கட்டளையின் கீழ் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், நீலகிரி மலைத் தொடரின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதியின் அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இங்கு பிரம்மாண்டமான வகையில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஈஷா யோகா மையத்தில் ஆண்டு தோறும சிவ ராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று வருகின்றனர்.
கால பைரவர் தகன மண்டபம்
இந்நிலையில் கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமம், முட்டத்துவயல் பகுதியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா? பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளிங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மை கண்டறியும் குழுவை அமைத்தனர்.
மேலும் இக்குழுவினர் நேற்று வேன் மூலம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது அங்கிருந்த ஈஷா யோகா மையம் ஊழியர்கள், ஈஷா ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்மை கண்டறியும் குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை வைத்து தடுத்து நிறுத்தினர்.
கண்ணாடி உடைப்பு
மேலும் அக்குழுவினருடன் ஈஷா அறக்கட்டளை ஆதரவாளர்கள், கிராம மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பிரச்சனை கைகலப்பாக மாறியது. இதையடுத்து அங்கு இருந்த ஆலாந்துறை போலீஸார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது ஈஷா ஆதரவாளர்கள் உண்மை கண்டறியும் குழுவினர் சென்ற வேனின் கண்ணாடியை உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரையும் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடக்கி உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்