Coimbatore Crime: என்னது பிரியாணியில் கருத்தடை மாத்திரையா?
பின்னர் இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் உள்நோக்கத்தோடு பதிவு செய்து இருந்த, நபர் மீது தாமரைக் கண்ணன் என்பவர் புகார் அளித்து இருந்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக இரு சமூகத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதர்ச உணவாக பிரியாணி உள்ளது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி என்றால் மிக விரும்பி உண்ணும் வழக்கம் உள்ளது. அதனால் இப்போது பெரும்பாலான விஷேச வீடுகளில் பிரியாணி விருந்து என்ற கலாச்சாரம் உருவாகி உள்ளது. ஆனால் அப்படி எல்லோரும் விரும்பி உண்ணும் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று செய்தி கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதிலும் திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்புவது கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் சமீப காலமாக சமூக வலை தளங்களில் மோதலை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுபவர் மீது மாநகர காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் மற்றும் ரவுடிகளுக்கு இடையே அரிவாள் வெட்டு, துப்பாக்கி சூடு போன்ற கொலை சம்பவங்கள் நகரையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரவுடிகளை கைது செய்தனர்.
ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதள கணக்குகளை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சமூகத்தில் விரோதத்தை வளர்க்கும் பதிவுகளை பதிவு செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் ஆராய்ந்தனர். அப்போது கோவையில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்வதாக இருப்பினர்கள் இடையே மோதலை உருவாக்கும் பதிவு இருந்தது. இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் உள்நோக்கத்தோடு பதிவு செய்து இருந்த, நபர் மீது தாமரைக் கண்ணன் என்பவர் புகார் அளித்து இருந்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்