’சாதி வெறியர்களுக்கு சவுக்கடி’ பெருமாள் முருகன் நாவலுக்கு சர்வதேச அங்கீகாரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’சாதி வெறியர்களுக்கு சவுக்கடி’ பெருமாள் முருகன் நாவலுக்கு சர்வதேச அங்கீகாரம்!

’சாதி வெறியர்களுக்கு சவுக்கடி’ பெருமாள் முருகன் நாவலுக்கு சர்வதேச அங்கீகாரம்!

Kathiravan V HT Tamil
Mar 14, 2023 07:38 PM IST

”எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்குப் பிறகு அதிகமான மக்கள் சாதி ஆணவக்கொலைகள் பற்றி அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” எழுத்தாளர் பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகன்

சர்வதேச புக்கர் பரிசு 2023-ன் நீண்ட பட்டியலில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 புத்தகங்கள் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியாவை சேர்ந்த தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான ‘பைர்’ இடம்பிடித்துள்ளது.

’தி இண்டர்நேஷனல் புக்கர்’ பரிசுக்கான நீண்ட பரிசீலனை பட்டியலில் பைர்
’தி இண்டர்நேஷனல் புக்கர்’ பரிசுக்கான நீண்ட பரிசீலனை பட்டியலில் பைர்

56 வயதான எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவல் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் ‘பைர்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

இரு வேறு சாதிகளைச் சேர்ந்த குமரேசனும் சரோஜாவுக்கு இடையே உருவான காதல் மற்றும் ஆணவப்படுகொலைகள் பற்றி இந்நாவல் பேசுகிறது. இதில் வெற்றி பெற்ற படைப்பாளருக்கும் மொழிப்பெயர்பாளருக்கும் 50 ஆயிரம் பிரிட்டீஷ் பவுண்டுகள் வரும் மே 23ஆம் தேதி பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெருமாள் முருகனின் பூக்குழி நாவல்
பெருமாள் முருகனின் பூக்குழி நாவல்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறுகையில், "சில நிமிடங்களுக்கு முன்பு எனக்கு இந்த செய்தி கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், 'பைர்' ஆணவக்கொலைகளை பற்றி பேசுகிறது. ஆணவக்கொலைகள் நம் நாட்டில் மிகப் பெரிய பிரச்சனை, எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்குப் பிறகு அதிகமான மக்கள் இந்த பிரச்சினையைப் பற்றி அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும் பெருமாள் முருகன், இதுவரை பத்து நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நான்கு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்ட இவரது ‘மாதொருபாகன்’ நாவல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு பரிசையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதி ஆணவக்கொலைகள் குறித்து பேசும் பெருமாள் முருகனின் நாவலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் இது ‘சாதி வெறியர்களுக்கு கிடைத்த சவுக்கடி’ என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.