IT Raid: திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களில் வருமாக வரித்துறை சோதனை நிறைவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  It Raid: திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களில் வருமாக வரித்துறை சோதனை நிறைவு

IT Raid: திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களில் வருமாக வரித்துறை சோதனை நிறைவு

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 08, 2023 09:04 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்துசெல்லவில்லை என்றார். தனக்கும் அமைச்சர் எ.வ வேலுவிற்கும்எந்த தொடர்பும் இல்லை என்றார். எதற்காகதனது இல்லத்தில் சோதனை நடந்தது என புதிராக உள்ளது என்றார்.

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

அமைச்சர் எ.வ வேலு தொடர்பான இடங்களில் தொடங்கிய வருமானவரி சோதனை அன்று,கோவை திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு, அலுவலகம், காசா கிராண்ட் அலுவலகம் அதன் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் வீடு, கோவை மாமன்ற உறுப்பினர் சாமி வீடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

3 நாட்களில் 4 இடங்களில் சோதனை முடித்த அதிகாரிகள், தொடர்ச்சியாக இன்று 6ஆவது நாளாக மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீ ராம் அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டும் சோதனை தொடர்ந்தனர்.

இதையடுத்து இன்று மாலை 6.30 மணியளவில் சோதனையை முடித்து அதிகாரிகள் சென்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை என்றார். தனக்கும் அமைச்சர் எ.வ வேலுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். எதற்காக தனது இல்லத்தில் சோதனை நடந்தது என புதிராக உள்ளது என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எ.வ வேலு, " காசாகிராண்ட் யாருன்னே இன்னைக்கு வரை எனக்கு தெரியாது. கோவைக்கு செல்லும் போது அரசு விடுதி கிடைக்காத நேரத்தில் அப்பாசாமி கட்டிய ஹோட்டலில் நான் தங்கி உள்ளேன். அப்போது கூட அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த இரண்டு கம்பெனிக்கும் எனக்கும், எனது துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நீங்கள் சொல்லித்தான் மீனா ஜெயக்குமார் என்பவர் பெயரே எனக்கு ஞாபகம் வருகிறது. ஜெயக்குமார் திருவண்ணாமலையில் பிறந்தவர். சிறுவயதில் கோவைக்கு சென்று அங்கு ரியல் எஸ்டேட் செய்தவர் அங்கே செட்டில் ஆகிவிட்டார். திருவண்ணாமலைக்காரர் என்பதால் அவர் என்னை வரவேற்பது கொலை குற்றமா?; ஆனால் அவரது வணிகத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்வது என்ன நியாயம்.

அந்த குடும்பத்தையும் எனது குடும்பத்தையும் தொடர்புப்படுத்தி பேசுவது என்னவிதத்தில் நியாயம். தனிப்பட்ட முறையில் என் நடத்தையை கெடுக்க பலர் முயன்று வருகிறார்கள். ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாக என்றைக்கும் நான் இருப்பேன்" என அமைச்சர் எ.வ.வேலு கூறியது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.