ICICI BankStaff: வாடிக்கையாளருக்கு தெரியாமல் கிரெடிட் கார்டு வாங்கி மோசடி-வங்கி ஊழியர் கைது
அமேசான் இணைய தளத்தில் சுமார் ரூ.7,58,029/-வரை ஏராளமான பொருட்கள் வாங்கி உள்ளனர். அதன் மூலம் தனக்கு சட்டரீதியான பிரச்சனை ஏற்பட்டதாக ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர்IPS அவர்களிடம் புகார் கொடுத்தார்.
வங்கி வாடிக்கையாளருக்கு தெரியாமல் கிரெடிட் கார்டு வாங்கி அமேசானில் பொருள் வாங்கி ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டையை சேர்ந்த முன்னாள் ஐசிஐசிஐ வங்கி ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த கௌதமி என்பவர் தனது பெயரில் யாரோ ஐசிஐசிஐ வங்கியில் தனது மொபைல் மற்றும் ஈ- மெயில் முகவரியை மாற்றி கடன் அட்டை பெற்றுள்ளனர். அதன் மூலம் அமேசான் இணைய தளத்தில் சுமார் ரூ.7,58,029/-வரை ஏராளமான பொருட்கள் வாங்கி உள்ளனர். அதன் மூலம் தனக்கு சட்டரீதியான பிரச்சனை ஏற்பட்டதாக ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர்IPS அவர்களிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படிடையில் வழக்கு பதிவு செய்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைநடத்தினர்.
இதில் சென்னையில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியரான சைதாப்பேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர் தான் வங்கியில் வேலை பார்த்து வந்த போது தனது உறவினர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி மொபைல் எண்களை பெற்று அவற்றின் மூலம் கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் பெற்று அதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையர் திரு கி சங்கர் IPS அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரக இணைய வழி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏமாந்த நபர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்ற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்