H.Raja : 'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  H.raja : 'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு

H.Raja : 'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2024 06:25 PM IST

H.Raja : நெற்றியில் பொட்டு வைக்க கூடாது. கோயில்களில் தரப்படும் கயிறுகளை கட்டக்கூடாது என சொல்வது பெரும்பான்மை மதத்தினரை தாக்குவது போன்று உள்ளது. இதில் நீதிபதி சந்துருவின் உள்நோக்கத்தோடு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு

'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு
'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ம் வகுப்பு மாணவர் சின்னதுரை, மற்றும் அவரது தங்கை ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சின்னதுரையின் சக மாணவர்களான சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வி கல்லூரி மாணவர்களிடம் ஜாதிய இன உணர்வால் உருவாகும் வன்முறையை தவிர்க்கவும் நல்லிணக்கம் ஏற்படுவதற்காகவும் வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செவ்வாய் என்று வழங்கினார்.

உள்நோக்கத்தோடு அறிக்கை

இந்நிலையில் சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று மையக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது. கோயில்களில் தரப்படும் கயிறுகளை கட்டக்கூடாது என சொல்வது பெரும்பான்மை மதத்தினரை தாக்குவது போன்று உள்ளது. இதில் நீதிபதி சந்துருவின் உள்நோக்கத்தோடு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட்டாரங்களில் எந்த ஜாதி என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள் இந்த பரிந்துரைகள் தீங்கிழைக்க கூடியன. இதனை நிராகரிக்க வேண்டும் என கூறுவது பாஜக மையக்குழு தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதில் கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி மாதிரி திராவிடர் நல பள்ளி போன்றவற்றை நீக்கி அரசு பள்ளி என அரசு அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் பள்ளிப் பெயரை ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என உறுதிமொழி பெற்ற பின்னரே பள்ளி துவங்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் தனியார் பள்ளிகளில் ஜாதி பெயர் இருந்தால் அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதியை அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வண்ணம் திட்டக்கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் அந்த அறிக்கையை அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக 70 சதவீதம் அதிகமாக சிறுபான்மையினரால் நடத்தப்பட்ட பணிகளில் ஏற்கனவே திலகம் இடுவது கையில் கயிறு அணிவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சந்துரு தனது ஆய்வு அறிக்கையை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இந்த அறிக்கையை அமல்படுத்தக் கூடாது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு

தேனியில் ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டி சந்துரு அறிக்கை நகலை ஊராட்சி கூட்டத்தில் கழித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் சந்துருவின் அறிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.