HT Explainer: திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Explainer: திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

HT Explainer: திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

Karthikeyan S HT Tamil
Apr 13, 2023 12:01 PM IST

Marriage Registration: திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

திருமணம்
திருமணம்

பதிவு செய்யும் முறை:

திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள திருமணப்பதிவு என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைக்க வேண்டும்.

இணைக்க வேண்டியவை:

ஆன்லைன் விண்ணப்பம் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ், கோயில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது ) முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், வயதுச் சான்றுக்காக பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், முதல் திருமண சான்றிதழ், சாட்சி கையொப்பம் இடும் இரண்டு நபர்களின் அடையாள அட்டை மணமக்களின் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை இணைக்க வேண்டும். 

விண்ணப்பம்:

விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தின் இணையதள பக்கத்திற்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உங்களது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள, நீங்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். 

குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட இரண்டு நபர்களுடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

கட்டணம்:

90 நாட்களுக்குள் பதிவு செய்தால் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணமாக ரூ.50 சேர்த்து 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.