Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

Kathiravan V HT Tamil
Oct 14, 2024 02:42 PM IST

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைய தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில், மேற்கு வடமேற்கு திசையில் நகரும்!

Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!
Weather Update: தமிழ்நாட்டை சுத்து போட்ட மேகங்கள்! பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்!

வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16, 17 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.  

19 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை 

இதனால் இன்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு கனமழையும் இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நாளைய வானிலை எச்சரிக்கை  

நாளைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அக்டோபர் 17ஆம் தேதிக்கான வானிலை நிலவரம் 

நாளை மறுநாளான அக்டோபர் 17ஆம் தேதி அன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை காஞ்சிபுரம், இருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.