Weather Update : மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த எட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது.. உங்க ஏரியா இருக்கா?
Weather Update : நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Weather Update: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..அல்ர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்ச வெப்பநிலை :
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 37.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.