Rowdy Arrest: ரவுடியை சுட்டுபிடித்த காவலர்… என்ன நடந்தது?
சென்னையில் ரவுடி பெண்டு சூர்யாவை காவலர் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை மாவட்டம் அயனாவரத்தில் கடந்த 20 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சக காவலர்களுடன் இணைந்து இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட்டார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை சங்கர் தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் இரும்பு கம்பியால் சங்கரை தாக்கிவிட்டு தப்பினர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி பெண்டு சூர்யா, கௌதம், சிவா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் கௌதம், அஜித் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்த நிலையில், சூர்யா அவரது அக்கா வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்டு சூர்யாவை கைது செய்ய முயன்றபோது, தலைமைக் காவலர் சரவணக் குமார், காவலர் அமானுதீன் ஆகிய இருவரையும் சூர்யா அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் தற்காப்புக்காக தப்பி ஓட முயன்ற ரவுடி சூர்யாவை காவலர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பெண்டு சூர்யாவின் காலில் குண்டு பாய்ந்தது.
அவரை கைது செய்த கைது செய்த காவல்து றையினர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்து உள்ளனர். காயமடைந்த காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதான ரவுடி பெண்டு சூர்யா மீது 15 வழக்குகள் நிலுவையில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்