Govt. Arts and Science College : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேரடி மாணவர் சேர்க்கை எப்போது? விவரங்கள் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Govt. Arts And Science College : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேரடி மாணவர் சேர்க்கை எப்போது? விவரங்கள் உள்ளே!

Govt. Arts and Science College : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேரடி மாணவர் சேர்க்கை எப்போது? விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jul 01, 2023 08:33 AM IST

Govt Arts and Science college admission : இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின் தரவரிசை அடிப்படையில் இன வாரி ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 84,899 மாணவர்கள் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த மாதம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றம் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வந்தது.

இதில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30ம் தேதி வரை சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஜூலை 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுவரை 36,626 மாணவர்களும், 48,273 மாணவிகளும் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, இந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்த 23,295 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. ஜூலை 3ம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு  www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை மாணவ, மாணவிகள் பதிவு செய்தனர்.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது.

இந்த கல்லூரியில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மொத்தம் 1,07,299 இடங்களில் சேர்வதற்கு 2,46,295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ம் தேதி தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40,287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் 40,287 மாணவர்கள் சேர்ந்தனர். அதில், 15,034 பேர் மாணவர்கள், 25,253 பேர் மாணவிகள் ஆவர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் ஆவர்.

தொடர்ந்து ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மொத்தமாக 75,811 மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31,621 பேரும், மாணவிகள் 44,190 பேரும் ஆவர்.

முதல் முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்த பின்னர் வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குநரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப்பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின் தரவரிசை அடிப்படையில் இன வாரி ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 84,899 மாணவர்கள் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும், ஜூலை 4ம் தேதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி பட்டியலின மாணவர்களுக்கும், 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.