R.N.Ravi: ஊழலுக்கு தீர்வாக இருக்கிறது 'டிஜிட்டல் இந்தியா' - ஆளுநர் ரவி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  R.n.ravi: ஊழலுக்கு தீர்வாக இருக்கிறது 'டிஜிட்டல் இந்தியா' - ஆளுநர் ரவி

R.N.Ravi: ஊழலுக்கு தீர்வாக இருக்கிறது 'டிஜிட்டல் இந்தியா' - ஆளுநர் ரவி

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 26, 2023 01:54 PM IST

திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நடைபெற்ற 'தக்‌ஷா 2.O' என்ற தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப்படம்)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப்படம்)

திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நடைபெற்ற 'தக்‌ஷா 2.O' என்ற தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இதில் ஐஐஎம் இயக்குனர் பவன்குமார் சிங், டீன் சரவணன், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்

"மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன், ஐந்தாண்டு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, நாடு மேம்பட்டு வருகிறது.

சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதன் காரணமாக பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அதனால் நான் அந்த மாணவரை அழைத்து பாராட்டினேன்.

உலகில் சூரிய ஒளி ஒன்றுதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக உள்ளது. அதை நாம் பரவலாக பயன்படுத்த துவங்கி விட்டோம்.

இந்தியாவில் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு, 15பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள, 87 பைசா முறைகேடாக ஊழலுக்கு இரையாகிறது. இதற்கான தீர்வாக, 'டிஜிட்டல் இந்தியா' இருக்கிறது.

இந்தியாவில், 5மில்லியன் ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இவர்களில், 56சதவீதம் பெண்கள். இதன்மூலம் இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை. நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஏழை, எளிய மக்கள் சிறுதொழில் தொடங்க வழிவகை செய்யட்டுள்ளது. மேலும் உலகில் பொருளாதார சக்திமிக்க நாடுகளில், ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது (2047ம் ஆண்டு), சுயசார்புள்ள, உலகத்தின் முதன்மை நாடாக (வல்லரசு நாடாக) இந்தியா விளங்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.