Premalatha: 'விஜயகாந்திற்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்' - பிரேமலதா
விஜயகாந்திற்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம் எனவும்; அதை அரசு செய்யும் என தான் நம்புவதாகவும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று(டிசம்பர் 28) காலமானார். சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், ‘’விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதை அரசு செய்யும் என தான் நம்புகிறேன். விஜயகாந்தின் நினைவிடத்தில் தினந்தோறும் மலர் அலங்காரம் செய்வோம். விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கெடுத்த அனைத்து கட்சியினருக்கும் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஊடகத்தினருக்கும் தேமுதிக சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த் விட்டுச்சென்ற அனைத்துப் பணிகளையும் தேமுதிக சார்பில் செய்வோம் எனத் தெரிவிக்கிறேன்’’ எனக் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்