வேதாந்தாவுடன் இணைந்து செமிகண்டக்டர் தயாரிக்கும் முயற்சியை கைவிட்டது பாக்ஸ்கான்! தமிழ்நாட்டுக்கு அடிக்குமா ஜாக்பாட்
எலட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்கெனவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான செமிகண்டக்டர் தயாரிக்கும் முயற்சியில் இருந்து பாக்ஸ்கான் நிறுவனம் விலகி உள்ளது.
மொபைல்கள், கார்கள் உள்ளிட்ட எலட்ரானிக் பொருகளில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர்களுக்கு இந்தியாவில் கடும் கட்டுப்பாடு நிலவியது. இதனையெடுத்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் அனில் அகர்வாலின் வேதாந்த நிறுவனமும் தைவானை தாயகமாக கொண்டு இயங்கும் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானும் இணைந்து குஜராத் மாநிலத்தில் 1.54 லட்சம் கோடி செலவில் செமிகண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவப்போவதாக அறிவித்தன.
ஐரோப்பிய சிப் தயாரிப்பு நிறுவனமான STMicroelectronics சிப் தயாரிப்பிற்கான தொழில்நுட்ப பங்குதாரராக இதில் இணைந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகள் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை என கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் உலக அளவில் செமிகண்டக்டர் விற்பனை சந்தை 63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாந்தா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோல்கன் இன்வெஸ்ட்மண்ட் லிமிடெட்டின் கீழ் இயங்கி வந்த டிவின் ஸ்டார் டெக்னாலிஸ் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக வேதாந்தா குழுமம் கைப்பற்றியபோதே இந்த கூட்டணியில் இருந்து பாக்ஸ்கான் நிறுவனம் விலகும் என பலரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பரஸ்பர உடன்படிக்கையின் படி பலதரப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் பொருட்டு வேதாந்தா நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் முன்னேற்றம் இல்லை என்றும் வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கான் பெயரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செமிகண்டக்டர் உற்பத்தியில் வேதாந்தா நிறுவனம் முழு ஈடுபட்டுட்டன் இருப்பதாகவும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே தொழிற்சாலைகளை வெற்றிகரமான நடத்தி வரும் பாக்ஸ்கான் நிறுவனம் தனது செமிகண்டெக்டர் தொழிற்சாலையை இங்கேயே அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் டாடா நிறுவனம் 283 ஏக்கர் நிலத்தில் OSAT தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் டாடா குழுமத்துடன் இணைந்து பாக்ஸ்கான் நிறுவனம் மணப்பாறை சிப்காட் பகுதியில் செமிக்ண்டெக்டர் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தின் வளர்ச்சியில் இது அடுத்தக்கட்ட திருப்பு முனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எலட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்கெனவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்