Fire Accident: பட்டாசு வெடி விபத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
அத்திப்பள்ளி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமான தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள நவீன் என்பவருக்கு சொந்தமான பாலாஜி பட்டாசு தொழிற்சாலையில் இன்று (7.10.2023) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் பரவியது . தகவலறிந்து சம்பவ இத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்