Lady Bus Driver: நாங்களும் பஸ் ஓட்டுவோம்ல! கோவையில் கலக்கும் பெண் டிரைவர்!
Women's Day 2023: மகளிர் தினத்தன்னை பேருந்தை இயக்க விரும்பியும் அன்று வாய்ப்பு அமையாமல் போனது. ஆனால் தற்போது பேருந்தை இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் சோமனூர் வழிதடத்தில் இளம் பெண் ஷர்மிளா தனியார் நகரப் பேருந்தை இயக்கி அசத்தி வருகிறார். இது பெண் பயணிகள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை போக்குவரத்து துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கான தூண்டுகோளாக பெண் ஓட்டுனர் ஷர்மிளா தற்போது முன் உதாரணமாக இருக்கின்றார்.
இந்திய ராணுவம், விமானப்படை, ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. ஆனாலும் ஒரு சில துறைகளில் மிக குறைவான அளவில் மட்டுமே பெண்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. இதில் பேருந்து, லாரி உட்பட கனரக வாகனங்களை இயக்குவதில் பெண்கள் மிகக் குறைந்த அளவே உள்ளனர். இந்நிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா. இவர் மருந்தியல் துறையில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். ஆனாலும் தந்தையின் ஆட்டோவை இயக்குவதில் ஆர்வம் கொண்ட ஷர்மிளா தானே கன ரக வாகனங்களை இயக்க விரும்பினார். இதனால் தனது ஆர்வம் காரணமாக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். இவர் கோவை நகரின் சாலைகளில் திறம்பட தனியார் பேருந்தை இயக்குகின்றார்.
கனரக வாகன லைசென்ஸ் பெற்று இருந்த போதும் பேருந்து இயக்க வாய்ப்பு கிடைக்காமல் இந்துள்ளது. ஏற்கனவே மகளிர் தினத்தன்று டியூட்டில் கிடைத்தது. ஆனால், வழித்தடம் கிடைக்காதால் அன்று முடியவில்லை. தற்போது வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்தார். அதே சமயம் சாலைகளில் வாகனங்களை இயக்கும் போது நுட்பமாக பார்த்து இயக்க வேண்டி உள்ளது. இந்த சீட்டில் அமர்ந்து ஒட்டும் போதுதான் டிரைவர்களின் வலி என்ன என்பது தெரிகிறது என்றும் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா தெரிவித்தார்.
பெண்கள் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை இயக்கி பார்த்திருக்கிறோம். ஆனால் பேருந்து இயக்குவதை இப்போது பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பயணிகள் தெரிவிக்கின்றனர். எல்லாத்துறையிலும் பெண்கள் இருக்கும் நிலையில், பேருந்து ஓட்டுவதிலும் பெண்கள் இருப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்