’விலங்கு வெப்சீரிஸை விஞ்சும் ஓரினசேர்க்கை கொலைகள்! வாக்குமூலம் கொடுத்த போலிவைத்தியர்! வெளியான மூலிகைப்பொடி மர்மம்!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’விலங்கு வெப்சீரிஸை விஞ்சும் ஓரினசேர்க்கை கொலைகள்! வாக்குமூலம் கொடுத்த போலிவைத்தியர்! வெளியான மூலிகைப்பொடி மர்மம்!’

’விலங்கு வெப்சீரிஸை விஞ்சும் ஓரினசேர்க்கை கொலைகள்! வாக்குமூலம் கொடுத்த போலிவைத்தியர்! வெளியான மூலிகைப்பொடி மர்மம்!’

Kathiravan V HT Tamil
Nov 26, 2023 03:22 PM IST

”கேசவமூர்த்தி ஓரின சேர்க்கை உறவில் வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்ற விவரத்தை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்”

விலங்கு வெப்சீரீஸ் - கொலை செய்யப்பட்ட அசோக் ராஜ் - கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் கேசவ மூர்த்தி
விலங்கு வெப்சீரீஸ் - கொலை செய்யப்பட்ட அசோக் ராஜ் - கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் கேசவ மூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் மணல் மேடு என்ற பகுதியில் வசித்து வந்த 27 வயது இளைஞர் அசோக் ராஜன் என்பவர் சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த அவரை காணவில்லை என குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர்.

அப்போது சித்த வைத்தியரான 47 வயது நிரம்பிய கேசவ மூர்த்தி என்பவருடன் அசோக் ராஜன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அசோக் ராஜனை கொன்று வீட்டில் புதைத்ததாக சொன்னார்.

தன்னை சித்தமருத்துவர் என்று சொல்லிகொள்ளும் டுப்பாகூர் பேர்வழியான கேசவமூர்த்தி அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சுன்னத் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அசோக் ராஜனுக்கும் சுன்னத் செய்ததால் அவருக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்தவர்களை கொன்று உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி புதைத்த போலி வைத்தியர் விவகாரம் கும்பகோணம் நகரை பரபரப்பாக்கி உள்ளது. தீபாவளிக்கு ஊருக்கு வந்த அசோக், கடந்த 13ஆம் தேதி கேசவ மூர்த்தியிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது தனக்கு தவறான முறையில் சுன்னத் சிகிச்சை அளித்திருப்பதை அசோக் தெரிந்து கொண்டார். மேலும் வீட்டுக்கு வந்த அசோக்கை ஓரின சேர்க்கைக்கும் கேசவமூர்த்தை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தவறான சிகிச்சை செய்துள்ளதையும், ஓரின சேர்க்கைக்கு அழைத்த விவகாரத்தையும் அசோக் வெளியில் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் அசோக் ராஜனை கேசவ மூர்த்தி கொன்றுள்ளார்.

இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைதான போலி சித்த வைத்தியர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதில், அசோக் ராஜை போதை மூலிகை மருந்து கொடுத்து, உடல் பாகங்களை தனித்தனியே அறுத்து மூலிகை செடிகள் வளர்க்கும் இடங்களில் புதைத்ததாக கேசவ மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமின்றி, 2021ஆம் ஆண்டிலும் முகமது அனாஸ் என்பவரை மூலிகை பொடி கொடுத்து கொன்றதாகவும் கேசவ மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். ஓரினச்சேர்க்கையில் இருந்தபோது அவர்கள் விலகி செல்லும் போது ஏற்பட்ட ஆத்திரத்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்த நிலையில், கேசவமூர்த்தி ஓரின சேர்க்கை உறவில் வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்ற விவரத்தை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.