Jayakumar: அம்மா உணவகம் பெயர் மாற்றம் - திமுகவை காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar: அம்மா உணவகம் பெயர் மாற்றம் - திமுகவை காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்

Jayakumar: அம்மா உணவகம் பெயர் மாற்றம் - திமுகவை காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 15, 2022 08:36 PM IST

சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள அம்மா உணவகம் பெயர் மறைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவின் புகழை மறைக்க முடியாது என ஞானிசூனியங்களுக்கு தெரியாது என காட்டமாக விமர்சித்துள்ளார்.

அம்மா உணவகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு திமுகவை ஞானசூனியம் என கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்
அம்மா உணவகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு திமுகவை ஞானசூனியம் என கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக அமைந்திருக்கும் அம்மா உணவகத்தை திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களுக்கு பின்னர் மூடப்போவதாக தகவல்கள் பரவியது. ஆனால் அம்மா உணவகம் மூடப்படும் திட்டம் இல்லை எனவும் அறிவித்தனர்.

ஆனாலும் அம்மா உணவகம் கடந்த அதிமுக ஆட்சியை போல் தற்போது சரியாக முறையில் செயல்படவில்லை, சரியாக பராமரிக்கப்படவில்லை என ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணம் இருந்து வரும் நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த பெயர் மறைக்கப்பட்டு காலை உணவு திட்டம் என மாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்மாவின் பெயரை மறைத்தாலும் புகழை மறைக்க முடியாது என்பது இந்த ஞானசூனியங்களுக்கு தெரியாது போல என டுவிட்டரில் அந்த புகைப்படங்களையும், விடியோவையும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் பேசும்போது, அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து பேசினார்.

அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, அம்மா உணவகம் இப்போது எப்படி செயல்படுகிறதோ? அதே போல் எப்போதும் செயல்படும். மிகவும் வருமானம் குறைவாக உள்ள அம்மா உணவங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகங்களுக்கு ஊழியர்கள் தேவைப்பட்டால் கவுன்சிலர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

அம்மா உணவகத்தில் காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல் வழங்கப்படுகிறது. மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

இரவு நேரங்களில் சப்பாத்தி சாம்பார் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த உணவு பட்டியலில் புதிதாக ராஜ்மா, சென்னா மசாலா ஆகியவை சேர்க்கப்பட உள்ளன.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.