Erode bypoll result: ஈரோடு கிழக்கு தேர்தல் இதை தான் உணர்த்துகிறது-அண்ணாமலை
Annamalai: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி விளிம்பில் இருக்கிறார்.
ஆளும் கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உணர்த்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி விளிம்பில் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் 40,000 வாக்குகள் பின்னிலையில் உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ்-திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இப்போதே தாங்கள் வெற்றி பெற்றோம் எனக் கூறி இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் தமிழகமெங்கும் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய மகத்தான வரலாற்றில் பதிவாக கூடிய அளவுக்கு வெற்றியை தேடி தந்திருக்கிற ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில் தான் நடைபெற்றது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆளும் கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது. 2024 தேர்தல் பாஜகவிற்கான தேர்தலாக இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
டாபிக்ஸ்