Environment : மீன், கடல் வளம், பவளப்பாறை காக்க கடல்பாசிகளை அகற்ற நடவடிக்கை தேவை
Coral Reef : மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் காக்க ஊடுறுவும் மரங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதுபோல், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஊடுறுவும் கடல்பாசியை நீக்கி, பவளப்பாறைகளை காத்து மீன்வளம், கடல் வளம், பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க நடவடிக்கைகள் எடுப்பது உடனடி தேவையாக உள்ளது.

ஊடுறுவும் மரங்களை வெட்ட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 25,000 டன் நிலவிரை மரங்களில் இந்த மழைக்காலம் தொடங்கும் முன் 20,000 டன் மரங்களை நீக்க திட்டமிட்டிருப்பதாகவும், மீதியை அடுத்த ஆண்டு கோடைகாலத்திற்குள் நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஊடுறுவும் 2 மரங்களை நீக்கும் முயற்சி, உள்ளூர் மரங்களையும், புல்வெளிகளையும், அதை சார்ந்த உயிரினங்களைக் காத்து பல்லுயிர் பெருக்கத்திற்கு துணை புரியும்.
தமிழகத்தில் அதே போல் ஊடுறுவும் கடல்பாசியால் (1994-95ல் "காராஜினான்"எனும் வேதிப்பொருளை வணிகரீதியில் உற்பத்தி செய்ய மன்னார் வளைகுடா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது)-காப்பாபைகஸ் அல்வாரெசி- மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் 200 சதுர கிலோமீட்டர் வரை அழிக்கப்பட்டு, அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பவளப்பாறைகளைச் சார்ந்து உயிர் வாழும் மீன் இனங்களின் அளவும் குறைந்துள்ளது. 2012ம் ஆண்டு செய்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வளர்க்கப்பட்ட இடத்திலிருந்து ஊடுறுவும் கடல்பாசி தற்போது 60 கிலோமீட்டர் வரை பரவி பெருமளவு பவளப்பாறைகளை அழித்து வருகிறது.