Palani : பழனியில் வயதான பக்தரை மின் இழுவை ரயிலில் ஏற்றாமல் அலட்சியம் - மனதை உருக்கும் காட்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani : பழனியில் வயதான பக்தரை மின் இழுவை ரயிலில் ஏற்றாமல் அலட்சியம் - மனதை உருக்கும் காட்சி!

Palani : பழனியில் வயதான பக்தரை மின் இழுவை ரயிலில் ஏற்றாமல் அலட்சியம் - மனதை உருக்கும் காட்சி!

Divya Sekar HT Tamil
Jun 30, 2023 01:08 PM IST

பழனி முருகனுக்கு கோயிலுக்கு வந்த வயதான முதியவரை மின் இழுவை ரயிலில் ஏற்றாதால் படிப்பாதை வழியில் தவழ்ந்து தவழ்ந்து வந்த காட்சி பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பழனி ரோப் கார் - கோப்புபடம்
பழனி ரோப் கார் - கோப்புபடம்

அவருடன் வந்த குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம், உடல்நலம் இல்லாத முதியவரை மட்டுமாவது மின்இழுவை ரயிலில் ஏற்றி கொள்ளுமாறு கெஞ்சி கேட்டும் ஏற்ற அனுமதி மறுத்தனர். இதனால் படி வழிப்பாதையில் இறங்கினார். அப்போது அவரால் முழுமையாக நடக்கமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தொடர்ந்து நடக்கமுடியாமல் அவர் தவழ்ந்தபடியே படியில் இறங்கியதை பாத்த பக்தர்களை கீழே இருந்த செக்யூரிட்டிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற முதியவரை பாதுகாப்பாது இறக்கிய போது அவரால் முடியாமல் போனது.

பின்னர் அங்கிருந்து மரநாற்காலி மூலம் தூங்கி வந்து காரில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்இழுவைரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்கு பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக உடல்நலம் இல்லாத வயதான பக்தரை ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின்இழுவைரயில், ரோப்கார் ஆகியவற்றில் வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.