Dry Weather : ரொம்ப கஷ்டம் தான்.. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடுமாம்.. வெப்பநிலை இயல்பை விட அதிகமா இருக்குமாம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வெயில் (கோப்புபடம்)
தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வரும் 18ம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜனவரி 15ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை பனி மூட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல மார்ச் 18ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.