Nominations for DMK party posts: திமுக முக்கிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளின் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திமுகவின் மாவட்டச் செயலாளர் மாவட்ட அவை தலைவர் மாவட்ட துணை செயலாளர் பொருளாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தலைமை கழக உறுப்பினர் ஆகிய முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (செப்.22) முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த வேட்பு மனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புவோர் அதற்கான படிவத்தை முறைப்படி பூர்த்தி செய்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாகத் தலைமை கழகத்தில் செலுத்தி ரசித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த வேட்பு மனு தாக்கலில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைக் கழகத்தில் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.
செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தர்மபுரி, திருச்சி, கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுக்கான கட்டணத்தைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல் செப்டம்பர் 24ஆம் தேதி அன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தி தலைமை அலுவலகத்தில் ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
வரும் செப்டம்பர் 25ஆம் தேதி அன்று சென்னை திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திமுக தலைமை கழக அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்து, கட்டணம் செலுத்தி ரசீது. பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம் வேட்பு மனுக்களை வழிமொழிபவரும் முன்மொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகரப் பகுதி, மாநகர செயலாளர் மற்றும் தேர்ந்தெடுத்தப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். வேற்குமணி படிவத்தை ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.