DMK Mupperum Festival :திமுக முப்பெரும் விழா - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Mupperum Festival :திமுக முப்பெரும் விழா - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

DMK Mupperum Festival :திமுக முப்பெரும் விழா - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

Divya Sekar HT Tamil
Sep 02, 2022 04:28 PM IST

திமுக முப்பெரும் விழா இந்த ஆண்டு விருதுநகரில் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

<p>திமுக முப்பெரும் விழா</p>
<p>திமுக முப்பெரும் விழா</p>

இந்த நாளில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

<p>விருது பெறுவோர் பட்டியல்</p>
விருது பெறுவோர் பட்டியல்

அதில், “2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் திமுகழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கட்கும், அண்ணா விருது கோவை இரா.மோகன் அவர்கட்கும், கலைஞர் விருது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கட்கும் பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்கட்கும் பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசன் அவர்கட்கும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.