DIG Vijayakumar: டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையில் 8 பேருக்கு போலீசார் சம்மன்; இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dig Vijayakumar: டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையில் 8 பேருக்கு போலீசார் சம்மன்; இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்!

DIG Vijayakumar: டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையில் 8 பேருக்கு போலீசார் சம்மன்; இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 18, 2023 11:27 AM IST

சம்மனை பெற்றுக்கொண்ட பேசு தமிழா பேசு யூடூப் சேனல் நிறுவனர் ராஜவேல் நாகராஜ் மற்றும் வாராஹி என்பவரும், இன்று கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தனர்

டிஐஜி விஜயகுமார்
டிஐஜி விஜயகுமார்

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி தனது முகாம் அலுவலகத்தில், கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்பட்டுத்தி உள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர். காவல் துறை அதிகாரிகள், டி ஐ ஜி தற்கொலை தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில், பதிவிட வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில யூடியூப் சேனல்கள் மற்றும் தனிநபர்கள் காவல் துறையின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர். இப்படி சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

சம்மனை பெற்றுக்கொண்ட பேசு தமிழா பேசு யூடூப் சேனல் நிறுவனர் ராஜவேல் நாகராஜ் மற்றும் வாராஹி என்பவரும், இன்று கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தனர். உதவி ஆணையர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார், அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.