DIG Vijayakumar: டிஐஜி விஜயகுமார் தற்கொலை: பரபரப்புக்கு மத்தியில் பிரேத பரிசோதனை..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dig Vijayakumar: டிஐஜி விஜயகுமார் தற்கொலை: பரபரப்புக்கு மத்தியில் பிரேத பரிசோதனை..!

DIG Vijayakumar: டிஐஜி விஜயகுமார் தற்கொலை: பரபரப்புக்கு மத்தியில் பிரேத பரிசோதனை..!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 07, 2023 04:59 PM IST

கோவை அரசு மருத்துவமனையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது பிரேத பிரசோதனை நடந்து வருகிறது.

டிஐஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை
டிஐஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை அவர் தனது முகாம் அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலை தமிழகம் முழுவதும் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல. குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த விஜயகுமார் உடலை காவல்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர்.

பிரேத பரிசோதனை கிடங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி  நாராயணன், பார்வையிட்டுள்ளார். வடக்கு ஆர்டிஓ கோவிந்தன் அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது டிஐஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.pan

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.