Cyclone Michaung Update: ‘சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்! வெளுத்து வாங்கும் மழை! திணறும் தலைநகரம்!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cyclone Michaung Update: ‘சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்! வெளுத்து வாங்கும் மழை! திணறும் தலைநகரம்!’

Cyclone Michaung Update: ‘சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்! வெளுத்து வாங்கும் மழை! திணறும் தலைநகரம்!’

Kathiravan V HT Tamil
Dec 04, 2023 07:03 AM IST

”Cyclone Michaung Update: கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது”

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “மிக்ஜாம்” புயலாக வலுவடைந்து உள்ள நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாளை முற்பகல் தெற்கு ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மணிக்கு 80 முதல் 100 கி.மீ. பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்ககப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.