தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : திண்டுக்கல்லில் பயங்கரம்.. தாய் கண்முன் படுகொலை.. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் அதிர்ச்சி!

Crime : திண்டுக்கல்லில் பயங்கரம்.. தாய் கண்முன் படுகொலை.. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் அதிர்ச்சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 08, 2024 09:20 AM IST

Crime : மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று 07.07.24 இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர்.

திண்டுக்கல்லில் பயங்கரம்.. தாய் கண்முன் படுகொலை.. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் அதிர்ச்சி!
திண்டுக்கல்லில் பயங்கரம்.. தாய் கண்முன் படுகொலை.. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் அதிர்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சுள்ளான் என்பவரை 2020 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார்.

தாய் கண்முன் கொலை

இந்நிலையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று 07.07.24 இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையல் பொதுமக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மேலும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

முன்னதாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைநகர் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த 5 ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர். 

உடனடியாக ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.