தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Crime: A Young Woman Was Strangled To Death.. Betrayal By A Family Friend

Crime: இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை .. குடும்ப நண்பர் செய்த துரோகம்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 13, 2024 09:00 AM IST

ஒசூர் அருகே இளம் பெண் கழுத்தை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் கொலையாளி பெண்ணின் குடும்ப நண்பராக பழகியவர் என்பது தெரியவந்துள்ளது.

மூதாட்டி வெட்டிக் கொலை
மூதாட்டி வெட்டிக் கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சாய் சக்தி நகரை சேர்ந்தவர் நீலம். இவர் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் கடந்த நான்காம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலையில் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ரஜினி குமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக நீலத்தின் சகோதரரும் அவருடைய கணவரும் பெயிண்ட் கடை ஒன்றை நடத்தி வந்தனர். அந்தக் கடையில் பணிபுரிந்து வந்தவர் தான் ரஜினி குமார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீளத்தின் குடும்பத்துடன் ரஜினி குமார் நெருங்கி பழகி வந்துள்ளார்.

கொலை சம்பவம் நடந்த அன்று நீளத்தின் கணவர் அதிக அளவிலான பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை அதை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளார் இந்நிலையில் தனியே இருந்த நீலத்தை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரஜினி குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் நீலத்தை அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்