தொற்று அதிகரிக்கும் நேரத்திலும் அரசு அலட்சியம் – பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுரை
Corona Update Tamilnadu : தமிழகத்தில் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் உள்ளது. இன்று 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,366 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால், பரிசோதனைகளை நாளுக்கு 11,000 பேருக்கு செய்வோம் என அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா அதிகரிக்கும் வேளையிலும், TPR -தமிழகத்தில் 8 சதவீதம் என அதிகரித்து வரும் நிலையிலும், (கடந்த வாரத்தில் தமிழக TPR - 4.8 சதவீதம் இருந்தது) அரசு நேற்று 3,600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்துள்ளது போதுமானதா?
சென்னையில் இன்று 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் மிக அதிகமாக 434 பேர் உள்ளனர். இன்று TPR 8 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இத்தகைய சூழலில் சென்னையில் மட்டும் 1,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதாக அரசு சொன்னாலும் அதை செய்யவில்லை. பரிசோதனைகள் செய்யப்பட்ட புள்ளிவிவரம் வழங்கப்படுவதில்லை.
கொரோனா அதிகரித்தாலும், மருத்துவமனை சேர்க்கை, ஆக்ஸிஜன் தேவை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அதிகரிக்கவில்லலை என அரசு தெரிவித்திருந்தது. கடந்த வாரத்தில் மருத்துவமனையில் 20 பேருக்கு கீழ் தான் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் கூட தீவர சிகிச்சைப் பிரிவில் இல்லை. ஆக்ஸிஜன் தேவைப்படவில்லை.
ஆனால் தற்போது 70 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 பேருக்கு மேல் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. 3 பேருக்கு மேல் தீவிர சிசிக்கைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை சேர்க்கை, ஆக்ஸிஜன் தேவை, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி அதிகரித்து வருவதே உண்மை. கொரோனாவால் இறப்பு இல்லை என்று அரசு கூறினாலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 3 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்து குறித்து அரசு பதிவு செய்யவில்லை. தூத்துக்குடி, கோயம்புத்தூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா குறித்த விவரங்களை அரசு முறையாக பதிந்து வருவதாக கூறினாலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீடீர் சளித்தொல்லை, புளூ போன்ற காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யவேண்டும் என்பது அரசின் விதியாக இருந்தும், பல சமயம் கடைபிடிக்கப்படுவதில்லை.
கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர், சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தாலும், அது அரசின் ஏடுகளில் பதிவாகவில்லை.
குறிப்பாக கிராமப்புறங்களில் கொரோனா சார்ந்த பரிசோதனைகள் செய்ய வசதியில்லாதபோது காய்ச்சலுடன் கூடிய சளித்தொல்லைக்கு அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்காத நிலையில், கொரோனா பரிசோதனை வசதிகளை கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தித் தாராதவரை, உண்மை கொரோனா நிலையை அரசு எப்படி அறிய முடியும்.
தமிழகத்தில் XBB.1.16.1 பாதிப்பு உள்ளது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காக்க உடடினயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்