ரூ. 200 செருப்பு அறுந்ததால் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ. 200 செருப்பு அறுந்ததால் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

ரூ. 200 செருப்பு அறுந்ததால் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 08, 2022 04:57 PM IST

திருப்பூர் அருகே ரூ. 200 செருப்பு அறுந்த விவகாரம் தொடர்பா நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்குக்கான செலவை இழப்பீடாக பாதிக்கப்பட்டவருக்கு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

<p>செருப்பு அறுந்தது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு&nbsp;</p>
<p>செருப்பு அறுந்தது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு&nbsp;</p>

அந்த பெண் ரூ. 200, ரூ. 240 மதிப்பில் தலா இரண்டு ஜோடி செருப்புகளை வாங்கினார். இதற்கு உரிய ரசீது கேட்டும் கொடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து செருப்பு வாங்கிய ஒரு வாரத்திலேயே அறுந்து விட்ட நிலையில் செருப்பை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கடை நிர்வாகத்தினர் செருப்பை சரி செய்து தருவதாக கூறியுள்ளனர்.

சொன்னப்படி கடைக்காரர்கள் செருப்பை சரி செய்த கொடுத்த பின்னர், அந்தப் பெண் தனது காலில் அணியமுடியாத அளவுக்கு சிறிதாக போயுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் செருப்ப கடை தரப்பிலிருந்து ஆஜராகாத நிலையில், செருப்பான ரூ. 200 மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கின் செலவுத்தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட நபருக்கு செருப்பு கடை உரிமையாளர் வழங்க வேண்டும் என நிகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.