TNEA:முடிந்தது இன்ஜினிரியரிங் பொது கவுன்சிலிங்: காலியாக 54676 இடங்கள்
பொது கவுன்சிலிங்கில் மூன்று சுற்றுகள் நிறைவுபெற்றுள்ளன.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங்கில் மூன்று சுற்றுகள் நிறைவு அடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 2.19 லட்சம் இடங்களுக்கான பி.இ.- பி.டெக் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டின்படி, ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய கவுன்சிலிங், செப்டம்பர் 3 நேற்றுடன் நிறைவுபெற்றது. மூன்றுசுற்றுகளாக நடந்த இந்த பொது கவுன்சிலிங்கில், அரசுப் பள்ளி மாணவர் பிரிவில் 11,058 பேரும், மற்ற பிரிவுகளில்95,046 இடங்களும் என ஒரு லட்சத்து ஆறாயிரத்து104 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 54,676 இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாகவுள்ளன.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பதிவு நேற்று மாலையுடன் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.