தொடர்பில் இல்லாத வாடகைதாரர்!உடமைகளை வெளியே வீசிய உரிமையாளர் மீது புகார்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடர்பில் இல்லாத வாடகைதாரர்!உடமைகளை வெளியே வீசிய உரிமையாளர் மீது புகார்

தொடர்பில் இல்லாத வாடகைதாரர்!உடமைகளை வெளியே வீசிய உரிமையாளர் மீது புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 14, 2023 11:23 PM IST

கொடைரோடு ரயில்வே குடியிருப்பில் ஊழியர் ஒருவர் சக ஊழியருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு 3 மாதத்துக்கும் மேலாக அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவர் வீட்டில் இல்லாதபோது உடமைகளை தெருவில் வீசியுள்ளார். இதுதொடர்பாக உறவினர்கள், வீட்டு உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வாடகைதாரரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது உடமைகள் வெளியே எரியப்பட்டதால் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது
வாடகைதாரரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது உடமைகள் வெளியே எரியப்பட்டதால் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது

இதையடுத்து கடந்த ஐந்து மாதத்துக்கு முன் ரஜினிகாந்த் மதுரைக்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது வீட்டு உபயோக பொருள்களான பிரிட்ஜ், வாஷிங்மெஷின், எல்ஈடி டிவி, கட்டில் மெத்தை, பித்தளை அண்டா, பாணை, தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை பத்திரமாக வைக்க, ரயில்வே குடியிருப்பில் உள்ள சக ஊழியர் கார்த்திகேயனின் வீட்டை மாதம் 3 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு 50 ஆயிரம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக வாடகை பணத்துக்காக ரஜினிகாந்தை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அவரை பல்வேறு வகைகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாததால், அதே பகுதியில் வசிக்கும் ரஜினிகாந்தின் மாமியார் தாமரையிடம் வாடகை பணம் வசூல் செய்தார்.

கார்த்திகேயனுக்கும் திடீரென மதுரைக்கு பணியிட மாறுதல் கிடைத்ததையடுத்து, உடனடியாக அந்த குடியிருப்பை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட சூழலில், மீண்டும் கடந்த ஒருவாரமாக ரஜினிகாந்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இன்று பணி நேரத்தில் கார்த்திகேயன், சக ஊழியர் ஒருவருடன் ரஜினிகாந்தின் வீட்டு உபயோக பொருள்களை அள்ளி வெளியே வீசியுள்ளனர், இதுகுறித்து தகவல் அறிந்த ரஜினிகாந்தின் மாமியார் தாமரை, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொருள்களின் உடமையாளர் மற்றும் அவரின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காமல் பொருள்களை தெருவில் வீசுவது சட்டவிரோதம். எனவே பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ரயில்வே குடியிருப்பில் இன்று பரபரப்பு நிலவியது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.