Coimbatore : இனி கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஆப் வழியே ஆட்டோபுக் செய்யலாம்!
கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் இந்த சேவைக்கான கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று ரயில்வே ஸ்டேஷனில் ஆப் வழியே ஆட்டோ புக் செய்யும் வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள் ரயில்வே ஸ்டேசன் வாசலில் நிற்கும் ஆட்டோக்களில் தான் பெரும்பாலும் செல்கின்றனர். ஆனால் அவ்வப்போது அட்டோக்காரர்கள் அதிக கண்டனம் கேட்டு வருகின்றனர். இதனால் சமயத்தில் ஆட்டோகாரர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் கூட ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் சூழலும் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கோவை ரயில்நிலையத்தில் வாட்ஸப், மற்றும் ஸ்கேன் கோட்டு வாயிலாக ஆட்டோ புக் செய்யும் ஊர் கேப்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் இரயில் நிலைய சந்திப்பில் ஆப் (App) செயலி வழியே ஆட்டோ புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது. இதற்கான பணிகளை சேலம் கோட்டத்தை சேர்ந்த வணிகப்பிரிவு அதிகாரிகள் எடுத்து வந்தனர். இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ஊர் கேப்ஸ் நிறுவனம் இதற்கான ஆணையைப் பெற்றுள்ளது. கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் இந்த சேவைக்கான கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் எடுத்து பயணிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த சேவையை தெற்கு ரயில்வேயின் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் (சேலம் கோட்டம்) ஹரிகிரிஷ்ணன் துவக்கி வைத்தார். உடன் ஊர் கேப்ஸ் தலைமை செயல் அதிகாரி மரிய ஆண்டணி உடனிருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை வந்த பெரும்பாலான பயணிகள் அந்த ஆப் வழியாக ஆட்டோக்களை புக் செய்தனர். இது மிகவும் எளிதாக உள்ளதாகவும், நியாமான கட்டணம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்