தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore Mayor : கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா.. காரணத்தை சொன்ன மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்!

Coimbatore Mayor : கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா.. காரணத்தை சொன்ன மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 03, 2024 05:31 PM IST

Coimbatore Mayor : உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. அப்போதைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில் கல்பனா ஆனந்த குமார் மேயரானார். முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா.. காரணத்தை சொன்ன மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்!
கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா.. காரணத்தை சொன்ன மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்!

Coimbatore Mayor : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

சென்னைக்கு பேருந்தில் சென்று கவனம் ஈர்த்த மேயர்

இந்நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. அப்போதைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில் கல்பனா ஆனந்த குமார் மேயரானார். முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா ஆனந்த குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இது மட்டுமில்லாமல் கல்பனாவின் குடும்பத்தினர் தொல்லை செய்வதாக சரண்யா என்ற பெண் புகார் கூறி, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். காவல்துறையிலும் புகார் அளித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மேயரின் 19ஆவது வார்டில் திமுகவின் வாக்குகள் சரிந்ததாக கூறப்படுகிறது. திமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதிக வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் கட்சி தலைமை கல்பனா மீது கடும் அதிருப்தி அடைந்தது.

இந்த சூழலில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய கல்பனாவை ராஜினாமா செய்யச் சொல்லி திமுக மேலிடம் வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதைடுத்து அவரிடம் ராஜினாமா கடிதம் பெற்றதாக தகவல் வெளியானது. இதனிடையே உடல்நலத்தை காரணம்காட்டி மேயர் ராஜினாமா செய்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தான் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கல்பனா வேறு ஒருவர் மூலமாக கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்கான ராஜினாமா

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். உடல் நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை கமிஷனரிடம் கவுன்சிலர்கள் வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் சென்று அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றவர்கள் மேயரை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதைத்தொடர்ந்து திமுக தலைமை இடத்தில் இருந்து சரவணனுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்று சென்றதாக கூறப்படுகிறது. அவரை அமைச்சர் கே.என்.நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்து விவரங்களை கேட்டு அறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக செய்திகள் பரவியது ஏற்கனவே நெல்லையில் மாநகராட்சி மேயர் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில மாநகராட்சிகளின் மேயர்களும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9