Coimbatore: 'முதல்வர் எங்களை சந்தித்திருந்தால்…' தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தகவல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: 'முதல்வர் எங்களை சந்தித்திருந்தால்…' தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தகவல்

Coimbatore: 'முதல்வர் எங்களை சந்தித்திருந்தால்…' தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தகவல்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 11, 2023 07:57 AM IST

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எங்கள் மீது எந்த அரசியல் திணிப்பும் இல்லை. முதலமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

மின் நுகர்வோர் கூட்டமைப்பு
மின் நுகர்வோர் கூட்டமைப்பு

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார். ஏற்கனவே கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். மின்வாரியம் அவர்களுக்கு தோன்றியது போல் மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி கேட்டார்கள்.

மின் ஆணையமும் அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அப்போது தமிழக அமைச்சரிடம் முறையிட்டோம்.இப்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறையே இருக்காது என்று கூறினோம்.எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை காப்பாற்ற இந்த கூட்டமைப்பை தொடங்கினோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. நிலைக்கட்டணம் என்பது எந்த வகையிலும் சரியில்லை என்று எதிர்த்து வருகிறோம். மேலும், பீக் ஹவர் கட்டண உயர்வையும் எதிர்க்கிறோம். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறக்கோரி வலியுறுத்தி வருகிறோம்.

தொழில்துறை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ள நிலையில் இதனை மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எங்கள் மீது எந்த அரசியல் திணிப்பும் இல்லை. முதலமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில், 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.