தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore Crime : என் மனைவியுடன் பேசுவயா.. வடமாநில தொழிலாளி தம்புல்சால் சரமாரியாக அடித்து கொலை!

Coimbatore Crime : என் மனைவியுடன் பேசுவயா.. வடமாநில தொழிலாளி தம்புல்சால் சரமாரியாக அடித்து கொலை!

Pandeeswari Gurusamy HT Tamil
May 24, 2024 08:38 AM IST

Coimbatore Crime : மது அருந்திய பிறகு ரதிகண்டா பெகராவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மீண்டும் பிரவாகர் பெகரா தனது மனைவியுன் நீ பேச கூடாது என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு மீண்டும் முற்றியது. பிரவாகர் பெகரா அங்கிருந்த இரும்பு தம்புல்சால் ரதிகண்டா பெகாராவை தாக்கி உள்ளார்.

என் மனைவியுடன் பேசுவயா.. வடமாநில தொழிலாளி தம்புல்சால்  சரமாரியாக அடித்து கொலை!
என் மனைவியுடன் பேசுவயா.. வடமாநில தொழிலாளி தம்புல்சால் சரமாரியாக அடித்து கொலை!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிதுநாத் பெகரா. இவருக்கு ரதிகண்டா பெகரா என்ற 23 வயது மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் அருகே கணேச புரம் குறுக்கம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் குறுக்கம் பாளையத்தில் காளிப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர் காளியப்பன் வீட்டை திறந்து பார்த்தார். அங்கு தலையில் ரத்த காயங்களுடன் ரதிகண்டா பெகரா உயிர் இழந்த நிலையில் கிடந்ததால் காளியப்பன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காளியப்பன் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா சப் இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  காவல்துறையினர் ரதிகண்டா பெகராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 19ஆம் தேதி ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் பகத்துர்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமிதார் பெகரா மகன் பிரவாகர் பெகாரா என்பவருடன் சேர்ந்து ரதிகண்டா பெகரா மது குடித்தது தெரியவந்தது

இதையடுத்து காவல்துறையினர் பிரவாகர் பெகராவை பிடித்து விசாரணை செய்தனர். போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் ரதிகண்டா பெகராவை இரும்பாலான தம்புல்சால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மனைவியுடன் பேசியதால் தகராறு

பிரவாகர் பெகராவும், ரதிகண்டா பெகரவும் பல்வேறு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றியதால் நண்பர்களாக பழகி வந்தனர். பிரவாகர் பெகாரா செம்மானி செட்டி பாளையம் பகுதியில் தனது மனைவி துளசி வேராவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ரதிகண்டா பெகாரா அவ்வப்போது பிரவாகர் பெகரா வீட்டிற்கு சென்று திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரவாகர் பெகரா இல்லாத போது ரதிகண்டா பெகரா சென்று உள்ளார். அங்கு பிரவாகர் பெகராவின் மனைவியிடம் ரதி கண்டா பெகரா பேசியதாக கூறப்படுகிறது. இதை பிரவாகர் பெகரா கண்டித்து உள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தம்புல்சால் அடித்து கொலை

இந்நிலையில் சம்பவத்தன்று ரதிகண்டா பெகராவும், பிரவாகர் பெகராவும் அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்திய பிறகு ரதிகண்டா பெகராவின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மீண்டும் பிரவாகர் பெகரா தனது மனைவியுன் நீ பேச கூடாது என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு மீண்டும் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவாகர் பெகரா அங்கிருந்த இரும்பு தம்புல்சால் ரதிகண்டா பெகாராவை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்