Coimbatore : கோவை மக்களே முக்கிய அறிவிப்பு..3 இடத்தில் வரும் சூப்பர் வசதி! இனி இந்த பிரச்சனையே இருக்காது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore : கோவை மக்களே முக்கிய அறிவிப்பு..3 இடத்தில் வரும் சூப்பர் வசதி! இனி இந்த பிரச்சனையே இருக்காது!

Coimbatore : கோவை மக்களே முக்கிய அறிவிப்பு..3 இடத்தில் வரும் சூப்பர் வசதி! இனி இந்த பிரச்சனையே இருக்காது!

Divya Sekar HT Tamil
Apr 29, 2023 10:08 AM IST

அதிகரிக்கும் கடைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் உட்பட நகரில் மூன்று இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை உருவாக்கக் கோவை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி
மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி

இந்தச் சூழலில் அதிகரிக்கும் கடைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் உட்பட நகரில் மூன்று இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை உருவாக்கக் கோவை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமையும் செம்மொழி பூங்கா வளாகத்தில் இந்த மல்டி பார்கிங்கை அமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் பூங்காவின் முதற்கட்ட பணிகளுக்காக 172.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்கிங் வசதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 40 கோடி செலவில் இந்த மல்டி லெவல் பார்கிங் அமைய உள்ளது. 

ஒவ்வொரு பார்கிங்கிலும் தலா 250 என்று மொத்தம் 500 கார்களை இங்கே பார்க் செய்ய முடியும். செம்மொழிப் பூங்காவில் அமையும் மல்டி லெவல் பார்கிங் என்பது அருகே நேரு ஸ்டேடியத்தின் பார்க்கிங் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

கோவை போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்கிங் பிரச்சினைகளுக்குப் இது ஒரு நல்ல தீர்வை தரும். இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "செம்மொழிப் பூங்காவில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிராஸ் கட் சாலையில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்கும் திட்டத்தைக் கைவிடலாம் என பல அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு பார்கிங் தேவையில்லை என்பது அவர்கள் வாதம். இருப்பினும், கோவை காப்ரேஷன் கமிஷனர் இரண்டையும் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்" என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.