CM Stalin: டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொலை, கொள்ளை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.