TN 12th Results 2023 : ‘நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்’ பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn 12th Results 2023 : ‘நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்’ பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

TN 12th Results 2023 : ‘நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்’ பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Divya Sekar HT Tamil
May 08, 2023 01:54 PM IST

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

இதையடுத்து தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை 8,03,385, மாணவியர்களின் எண்ணிக்கை 4,21,013, மாணவர்களின் எண்ணிக்கை 3,82,371.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7.55,451 (94.03%)

மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்

மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

கடந்த மே 2022ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில்

தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277, தேர்ச்சிப் பெற்றோர். 7,55,998. தேர்ச்சி சதவிகிதம் 93.76%.

இந்நிலையிலை பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது.நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!" எனக் கூறியுள்ளார்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.