Palani: ‘முருகனுக்கே வெளிச்சம்’- பழனியில் அரசு பஸ் கண்டக்டர் - பக்தர்களிடையே கைகலப்பு - நடந்தது என்ன?
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் மற்றும் அரசுப்பேருந்து ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழ்வது, பழனி. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மற்றும் தை மாதங்களில் மாலையணிந்து பழனி முருகன் ஆலயத்துக்கு வந்து முருகப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் சமீபநாட்களாக பழனி முருகன் கோயிலுக்கு, சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பழனி பேருந்து நிலையத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து பேருந்துக்கு முந்தியடிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த பக்தர்களுக்கும், அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பக்தர்களை ஓட்டுநர், நடத்துநர் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.