Chennai Water Bodies : சென்னையில் நீர் நிலைகளைக் காக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி
Chennai: மேலும், சென்னைக்கு பொருந்தாக கடல்நீரை குடிநீராக்கும், ஆற்றல் தேவை அதிகமுள்ள (Energy-intensive) திட்டங்களில் அரசு முனைப்பு காட்டி (நெம்மேலி) செயல்படுத்தி வருவதும், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை எனும் நீரியல் நிபுணர் ஜனகராஜனின் கூற்றை மெய்பிப்பதாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன், சென்னையின் பருவநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கைகள் சார்ந்த திட்டம் வெளியிடப்பட்டது. அதில் 1991ம் ஆண்டு, 42 சதுர கி.மீட்டரில் இருந்த நீர்நிலைகளின் அளவு 2023ல் 18.9 சதுர கி.மீட்டராக குறைந்துள்ளது. அதே கால கட்டத்தில் சென்னையில் மனைகள் இருக்கும் பரப்பு 102 சதுர கி.மீட்ரில் இருந்து 295 சதுர கி.மீட்டராக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இடம் பெற்றிருந்தது.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், கடல் மட்ட உயர்வை சமாளிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை அத்திட்டம் பேசினாலும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து எந்த செயலும் திட்டத்தில் இல்லை.
2015 சென்னை வெள்ளத்திற்குப் பின் நீர்நிலைகளை மீட்டெடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தி வந்தாலும், தற்போது நீர்நிலைகளை காக்கும் திட்டங்களுக்கு பதில், மழைநீர் வடிகால் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2018ல் தன்னார்வ அமைப்பு ஒன்று செய்த ஆய்வில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தே சென்னையின் விரிவாக்கம் நடந்துள்ளது என வேதனையுடன் பதிவு செய்திருக்கிறது.
சென்னையின் விரிவாக்கம் காலத்தின் கட்டாயம் என இருந்தும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமல் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என இருந்தாலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தே விரிவாக்கம் நடந்துள்ளது.
1991-2010 இடைப்பட்ட காலத்தில் எங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து விரிவாக்கம் நடந்ததோ, அங்கு தான் வெள்ள பாதிப்புகளும் அதிகமாக நடந்தன.
ஆறுகள், குளங்கள், ஈர நிலங்கள் போன்றவை "பாசனத்திற்கான பகுதிகள்" எனத் தவறாக சித்தரிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு தற்போது இல்லை எனக் கூறி ஆக்கிரமிப்புகள் நடந்தேறியுள்ளது.
குடிநீரை தூய்மைப்படுத்துதல், பறவைகளுக்கும், தாவரங்களுக்கும் நீர், மீன் பிடித்தலுக்கு நீரை பாதுகாத்தல் போன்ற அரசுத் திட்டங்கள் இருப்பதுபோல், சென்னையின் நீர்நிலைகளைக் காக்கும் திட்டங்களும் இருந்தால் தான் நல்ல பலன் கிட்டும்.
இத்திட்டத்தில் சென்னையின் நீர்நிலைகளைக் காக்க எந்ததிட்டமும் இல்லை. ஏற்கனவே இருந்த திட்டங்களை மட்டுமே பேசி, புதுத்திட்டங்கள், நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது சென்னையின் நீர்நிலைகளைக் காக்க உதவாது.
சென்னையின் 2ம் விமான நிலைய விரிவாக்கத்தில் (பரந்தூரில்) 2605 ஏக்கர் ஈர நிலங்களாக இருந்தும், அதைப்பற்றி துளியும் கவலைகொள்ளாமல் விமான நிலையம் அமைக்க அரசு முற்படுவது பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும் என்பதை அரசு துளியும் உணரவில்லை.
மேலும், சென்னைக்கு பொருந்தாக கடல்நீரை குடிநீராக்கும், ஆற்றல் தேவை அதிகமுள்ள (Energy-intensive) திட்டங்களில் அரசு முனைப்பு காட்டி (நெம்மேலி) செயல்படுத்தி வருவதும், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை எனும் நீரியல் நிபுணர் ஜனகராஜனின் கூற்றை மெய்பிப்பதாக உள்ளது.
அரசின் பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள், சென்னை நீர் நிலைகளை காக்க தவறியதிலிருந்து வெற்றுப்பேச்சு தானா என எண்ணத் தோன்றுகிறது.
மேற்கூறியவற்றை கருத்தில்கொண்டு, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வருமா என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்