Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

Kathiravan V HT Tamil
Aug 05, 2024 09:40 AM IST

Rain Alert: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

இடி மின்னல் உடன் கூடிய மழை எச்சரிக்கை 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம். சாலைகள் சில இடங்களில் சேதம் அடையலாம். போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

சென்னையில் மழை எச்சரிக்கை 

சென்னையை பொறுத்தவரை எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், வேளச்சேரி, பல்லாவரம், அமைந்தகரை, அயனாவரம், பெரம்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், தண்டையார் பேட்டை, அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர், குன்றத்தூர், பொன்னேரி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நேற்றே எச்சரித்த வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.  இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. 

இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை.

தமிழக கடலோரப்பகுதிகள்

04.08.2024 முதல் 08.08.2024 வரை; மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

05.08.2024; மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.08.2024: மத்திய வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்

04.08,2024: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 5 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.