Today Weather Update : தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Weather Update : தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Today Weather Update : தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil
Dec 24, 2022 01:20 PM IST

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்குதென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, இன்று (டிச 24) தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (டிச 25) தமிழக கடலோர மாவட்டங்கள் .புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (டிச 26) :தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27.112921: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் இலங்கை மற்றும் மன்னார் 45 முதல் 5கிலோ மீட்டர் வேகத்தில் வளைகுடா பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.12.2921: தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே ல கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

27.11.20221 குமரிக்கடல் பகுதிகள் - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும்அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் - லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.