விறுவிறுப்பாகுது வேங்கைவயல் வழக்கு -புதுகையில் முகாமிட்டு சிபிசிஐடி எஸ்பி விசாரணை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விறுவிறுப்பாகுது வேங்கைவயல் வழக்கு -புதுகையில் முகாமிட்டு சிபிசிஐடி எஸ்பி விசாரணை

விறுவிறுப்பாகுது வேங்கைவயல் வழக்கு -புதுகையில் முகாமிட்டு சிபிசிஐடி எஸ்பி விசாரணை

Priyadarshini R HT Tamil
Jan 21, 2023 07:06 AM IST

மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கை துரிதப்படுத்தும் விதாமாக சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் புதுகையில் முகாமிட்டுள்ளார்.

கோபுப்படம்
கோபுப்படம்

இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின்பேரில்தனிப்படைகள்அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல்உதவி ஆய்வாளர்கள் கொண்டசிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  

வெள்ளனூர் காவல் நிலையத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதியப்பட்டது. மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 

மேலும் அரசு பேராசிரியர்கள் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், முனைவர் ஆர்.ராஜேந்திரன், கோகருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய சமூக நீதி கண்காணிப்புகுழுசம்பவம் குறித்து அண்மையில் வேங்கைவயலில் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து கலெக்டர் கவிதா ராமுவிடமும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, எஸ்பி வந்திதா பாண்டேவிடம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

இந்த சூழலில் வேங்கைவயல்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்யவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து சிபிசிஐடி இவ்வழக்கு விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வேங்கைவயல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

அதேசமயம் சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இவ்வழக்கில் கைது செய்ய வேண்டும் என்பதில் சிபிசிஐடி உறுதியாக உள்ளதால், சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார். வேங்கைவயல், இறையூர் கிராமங்களில் விசாரணை நடத்திய சிபிசிஐடி தனிப்படை போலீசாருடன் எஸ்பி தில்லை நடராஜன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியபடி உள்ளார். மிக விரைவில் இவ்வழக்கு முக்கிய கட்டத்தை எட்டும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.