Cauvery Water Dispute: தமிழகத்திற்கு நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து முழு அடைப்பு!
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று அவசரமாக கூட உள்ளது. இதில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 13000 கன அடி நீர் திறக்கும் படி கோரிக்கை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மார்க் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர் விவசாய சங்கத்தினர் வணிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது மேலும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்