Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் அப்போது நடைமுறையில் இருந்த கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டர்வர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தற்போது மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா விதிமுறைகள் ஏதும் மீறப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது, ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
டாபிக்ஸ்