C. N. Annadurai: ‘அண்ணா!அண்ணா!அண்ணா! எங்கள்‬ ‪அன்பின் தெய்வம் அண்ணா!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  C. N. Annadurai: ‘அண்ணா!அண்ணா!அண்ணா! எங்கள்‬ ‪அன்பின் தெய்வம் அண்ணா!’

C. N. Annadurai: ‘அண்ணா!அண்ணா!அண்ணா! எங்கள்‬ ‪அன்பின் தெய்வம் அண்ணா!’

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 03, 2023 07:09 PM IST

பேரறிஞர் அண்ணா மறைந்த நாள் இன்று

கோப்புப்படம்
கோப்புப்படம்

பேரறிஞர் அண்ணா 1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடராஜன் பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் அண்ணாதுரை.

அறிஞர் அண்ணா இளம்வயதில் தெருக்கூத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அது அரசியலுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தது. அண்ணா சிறு வயதில் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவே இருந்துள்ளார். அப்போது அவருக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார். காஞ்சி மாநகரில் அதிகம் கவனிக்கப்படாத புண்ணிய கோட்டீஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலையை வணங்குவதில் அதிக ஆர்வம் கொண்டார் அண்ணா.

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட அண்ணாவிற்கு பிடித்த விளையாட்டு கேரம்போர்டுதான். பின்னாட்களில் அரசியலுக்கு வந்த அண்ணா தன் பொழுது போக்கிற்காக சீட்டு விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பின்னாளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல் பொருளாதாரம் படித்து அங்கேயே பணியாற்றினார். அண்ணா ஆங்கிலத்தில் தேர்ந்த புலமை பெற்றிருந்தார். அண்ணாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தது அமெரிக்காவின் ஏழ் பல்கலைக்கழகம்

கலை பங்களிப்பு

அதுமட்டும் இல்லாமல் அண்ணா தேர்ந்த நடிகராகவும் இருந்து வந்தார். தான் எழுதிய சந்ரோதயம் சந்திர மோகன் உள்ளிட்ட நாடங்களில் அவர் நடித்தும் உள்ளார். அந்நாட்களில் மிகவும் புகழ் பெற்ற சிவாஜி கண்ட இந்து ராஷ்ரம் நாடகத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் எம்.ஜி.ஆர் தான். ஆனால் அவரால் நடிக்க முடியாத சூழல் உருவானபோது தன் வீட்டில் தங்கிருந்த நாடக நடிகர் கணேசன் என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார். பின்னாளில் அவர்தான் சிவாஜி கணேசன் என்று தமிழகம் கொண்டாடியது.

ஓர் இரவு படத்தின் முழு வசனத்தையும் 360 பக்கங்களையும் ஒரே இரவு எழுதி முடித்தார் அண்ணா.

அண்ணாவின் நூல்கள்

ரோமாபுரி ராணி, கம்பரசம், குமரிக்கோட்டம், விடுதலைப்போர், கற்பனைச்சித்திரம், சிறுகதை, ஆரியமாயை, உலகப்பெரியார்,

ஜமீன் இனாம் ஒழி்ப்பு, பணத்தோட்டம், தீ பரவட்டும்,1858-1948, அறப்போர், இலட்சிய வரலாறு,வர்ணாஸ்ரமம், ரேடியோவில் அண்ணா, நிலையும் நினைப்பும், தாழ்ந்த தமிழகம், மே தினம் போன்றகை அண்ணாவின் நூலகள் இதில் அவர் எழுதிய ஆரியமாயை நூலக்காக அண்ணா சிறைக்கு அனுப்பப்பட்டதோடு அவருக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.

அரசியல்

அரசியலில் ஆர்வம் கொண் களத்திற்கு வந்த அண்ணா என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்தான் அவர் பெரியார் தான் என்று அறிவித்தார். ஒரு கட்டத்தில் பெரியாருடன் முரண்பட்டு 1949ல் திமுக என்ற புது கட்சியை தொடங்கினார் அண்ணா. ஆனால் கட்சியின் தலைமை நாற்காலியை பெரியாருக்காக அண்ணா காலியாகவே வைத்திருந்தார். ஆம் அண்ணா மறையும் வரை திமுகவிற்கு தலைவர் அறிவிக்கப்படவே இல்லை. 1967ல் திமுக முதல் முறையாக வென்று ஆட்சியை பிடித்த போது அண்ணா முதலில் சென்று பார்த்தது பெரியாரை தான். திமுக கழகதின் வெற்றியை பெரியாருக்கு காணிக்கை ஆக்கினார் அண்ணா.

இன்றைய தமிழ்நாடு தமிழகம் சர்ச்சைக்கு முதன்மையான காரணம் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையல்ல. திமுக 1967ல் ஆட்சிக்கட்டிலுக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயரிட்டார். அப்போது சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடுவீர்கள் என்று கேட்டபோது ராஷ்டிரபதி, லோக் ராஷ்டிரபதி என்று பெயர் வைத்ததால் நீங்கள் என்ன லாபம் அடைந்தீர்கள் என்று எதிர் கேள்வி எழுப்பினார். சுயமரியாதை திருமண சட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தார் அண்ணா.

தமிழகத்தை உலுக்கி எடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அறிவித்தார் அறிஞர் அண்ணா. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அண்ணா. இது போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தார் அண்ணா.

மேற்கோள்கள்

அண்ணாவில் மேற்கோள்கள் தமிழகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்றவை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போன்ற பல மேற்கோள்களை கொண்டு வந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்ற தொடர் பலமொழி என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது அறிஞர் அண்ணாவின் சொல்லாட்சிதான்.

இன்றைய தமிழகத்திற்கு வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பல்வேறு திட்டங்களில் அண்ணாவின் பங்கு அளப்பரியது.

மரணம்

இன்னும் பல சாதனைகளை செய்திருக்க வேண்டிய அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா தனது 60 வயதில் 3 பிப்ரவரி 1969ல் உயிரிழந்தார். அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் தனது இறப்பிலும் சாதனை படைத்து சாதித்தவர்தான் சி.என். அண்ணாதுரை

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.