தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bsp Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Jul 07, 2024 11:01 AM IST

BSP Armstrong Murder: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையரிடம் மனு

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் எந்த பதிலும் அளிக்கவில்லை.