தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bsp Armstrong Murder: சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை!’ குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்!

BSP Armstrong murder: சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை!’ குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்!

Kathiravan V HT Tamil
Jul 06, 2024 03:01 PM IST

BSP Chief Armstrong's Murder Case: இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது சரண் அடைந்து உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.

BSP Armstrong murder: சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை!’ குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்!
BSP Armstrong murder: சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை!’ குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

அம்பேத்கர் கொள்கை வழியில் நின்றவர் 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக விரோத கும்பல்களின் இந்த செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏழை எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக சிறப்பான முறையில் பணியாற்றினார். பௌத்தத்தை பரப்புவதே இந்த மண்ணில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து உயர்த்தி பிடித்தவர். தன்னுடைய இல்லதிற்கு அருகே புதிய புத்த விகார்களை கட்டி உள்ளார். 

சொந்த இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் 

செல்வி மாயாவதி அம்மையாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வந்தவர். நாளை காலை அவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செய்ய சென்னை வருகின்றார். அவரது திரு உடலை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. அவரது கட்சி அலுவலக வளாகத்திற்கு உள்ளே ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி தர வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்து உள்ளது. அந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகளும் பரிசீலிக்க வேண்டும். அவருடைய சொந்த பட்டா இடத்தில், அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி தர வேண்டும். 

சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை 

இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது சரண் அடைந்து உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. 

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கொலையில் தொடர்புடையவர்கள், தூண்டிவிட்டவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற அளவில், புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக் கூடாது. உண்மை குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும். 

பொதுமக்கள் பிரச்னைக்காக பல்வேறு நடவடிக்கைகளில் தலையிட்டு உள்ளார். அதனால் அவருக்கு முன் விரோதம் உண்டு. இது போலீஸ்க்கு நன்றாக தெரியும். அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். அது அதிர்ச்சி அளிக்கின்றது. குற்றவாளிகளை கைது செய்வதிலாவது விழிப்பாக இருக்க வேண்டும், அதில் அவர்கள் அலட்சியமாக இருக்க கூடாது.

தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றனர் 

தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள், குறிப்பாக் தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கின்றது. அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்டு உள்ளார். இது காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டு இருக்கும் சவால். 

கூலிப்படை கும்பலை அடையாளம் கண்டு, அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகின்றது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v